நாடு முழுவதும் மதுவுக்கு தடை கொண்டு வாங்க….. நிதிஷ் குமார் கோரிக்கை

 

நாடு முழுவதும் மதுவுக்கு தடை கொண்டு வாங்க….. நிதிஷ் குமார் கோரிக்கை

நாடு முழுவதும் மதுவுக்கு தடை கொண்டு வர வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: மது விலக்கை அருகில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்ல நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். இது மகாத்மா காந்தியின் விருப்பம். மது வாழ்க்கையை சிதைத்து விடும் என அவர் கூறினார்.

நிதிஷ் குமார்

கடந்த காலங்களில் நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால் பின்னர் அது திரும்ப பெறப்பட்டது.  பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூர் மதுவுக்கு தடை விதித்தார். ஆனால் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. நானும் கடந்த 2011ம் ஆண்டு முதல் மதுவிலக்கை செயல்படுத்த திட்டமிட்டு வந்தேன்.

மதுவுக்கு தடை

கடைசியில் 2016ல் மதுவிலக்கை அமல்படுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் மதுவிலக்கை உறுதி செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த மாநாட்டில் அவர் விளக்கி கூறியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மதுவுக்கு தடை விதித்தால் பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்புகளும் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.