நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

 

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு டெல்லி நகரம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் போது நல வழக்கு தொடரப்பட்டது. இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர், பட்டாசு தயாரிப்பாளர்கள், மத்திய அரசு மற்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் இந்த வழக்கில் வரும் தீர்ப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.