நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்குங்கள் : ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்குங்கள் : ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறைக்கு தண்ணீர் காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.அவரை கடந்த ஆண்டே கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. 
ttn

இது ஒரு புறம் இருக்க, நித்தியானந்தா ஆசிரமத்திற்குச் சென்ற பிராணாசாமி என்னும் முருகானந்தம் என்பவரைக் காணவில்லை என்று அவரது தாயாரும், நித்தியானந்தாவின்  தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வாறு அவர் மீது அடுக்கடுக்காக புகார்களும் கைது நடவடிக்கைகளும் குவிந்து வருகின்றன. இருப்பினும், நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெற வில்லை. 

ttn

இந்நிலையில், லெனின் கருப்பன் என்பவர் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாகக் கூறி பெங்களூரு ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை கைது செய்து ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ttn

ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாததால் இன்று அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனால்,  நாடு முழுவதும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியலை வரும் 23 தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அன்றும் அவர் ஆஜராகவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்க ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவர் விசாரணைக்கு ஆஜராகமல் இருப்பதால் இந்த நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.