நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு: கொரோனாவை விரட்ட வெறிச்சோடிய சாலைகள்

 

நாடு முழுவதும்  இன்று சுய ஊரடங்கு: கொரோனாவை விரட்ட வெறிச்சோடிய சாலைகள்

நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில்   315 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில்   315 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ttn

இதையடுத்து  கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “22 ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். இது மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு.  அத்தியாவசிய வேலைகளில்  பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.   பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை  தொடர்ந்து   பஸ்கள் ஓடாது ,மெட்ரோ ரெயில்கள்,  சந்தைகள் போன்றவை இயங்காது  தமிழக அரசு தெரிவித்துள்ளது . இருப்பினும் மருந்தகங்கள், மருத்துவமனைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில்  மோடியின் மக்கள் ஊரடங்கு கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்கியது. சாலைகளில்  நடமாட்டம், வாகனங்கள் இன்றி வெறிசோடி காணப்படுகிறது .