நாடு திரும்பும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் !!

 

நாடு திரும்பும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நாடு திரும்ப உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நாடு திரும்ப உள்ளார். 

csk

நடப்பு ஐ.பி.எல் டி.20 தொடரின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வரும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் இருப்பதோடு அல்லாமல் ப்ளே ஆஃப் வாய்ப்பையும்  முதல் அணியாக உறுதி செய்துள்ளது. 

sam

இந்த தொடரின் துவக்கத்தில் ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் சிலரை மட்டுமே மாற்றி மாற்றி களமிறக்க வரும் தோனி எந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்களை பெரிதளவில் மாற்றவில்லை. 
இதனால் கடந்த தொடரில் மாஸ் காட்டிய சாம் பில்லிங்ஸ் இந்த தொடரில் வாய்ப்பே கிடைக்காமல் தவிந்து வந்தார், தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கிடைத்த ஒரு வாய்ப்பிலும் டக் அவுட்டாகி வெளியேறியதால் சாம் பில்லிங்ஸ் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

sam

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கேற்பதாக சாம் பில்லிங்ஸ் இன்றே நாடு திரும்ப உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஒன்றில் கெண்ட் என்னும் அணிக்காக விளையாட இன்றே நாடு திரும்பும், நாளைய கெண்ட் அணியில் இணைய உள்ளதாக தெர்கிறது. 

csk
சாம் பில்லிங்ஸ் நாடு திரும்புவது சென்னை அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், எதாவது ஒரு வீரருக்கு காயம் ஏற்படும் படும் சமயத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வதில் சென்னை அணிக்கு நிச்சயம் சிறு தடுமாற்றமாவது ஏற்படும்.

இதையும் வாசிக்க: காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!