நாடு தழுவிய லாக்டவுன் விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது…. கூட்டாட்சிக்கு எதிரானது…. அசாதுதீன் ஓவைசி தாக்கு

 

நாடு தழுவிய லாக்டவுன் விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது…. கூட்டாட்சிக்கு எதிரானது…. அசாதுதீன் ஓவைசி தாக்கு

நாடு முழுவதுமாக லாக்டவுன் விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என மத்திய அரசை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையாக தாக்கினார்.

அனைத்து இந்திய மஜிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லீமின் (AIMIM) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி எப்போதும் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். ஆன்லைனில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: தேசிய பேரழிவு நிர்வாக சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டத்தின்கீழ் இந்த லாக்டவுன் அரசியலமைப்புக்கு எதிரானது. மத்திய அரசால் நாடு முழுவதும் ஊரடங்கு (லாக்டவுன்) விதிக்க முடியாது.

லாக்டவுன்

இது கூட்டாட்சி எதிரானது. அது (லாக்டவுன்) மாநில அதிகாரத்துக்கு உட்பட்டது மற்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசு (தெலங்கானா) ஏன் அமைதியாக இருக்கிறது என நான் ஆச்சரியபடுகிறேன். இந்த லாக்டவுனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவுரங்கபாத் விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர். வீட்டுக்குள்ளே இருக்கும்படி மலேகான் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். கோவிட்-19 எந்தவொரு மனிதனையும் பாதிக்கக்கூடியது. 

கோவிட்-19

ஆகையால் தனிமைப்படுத்துதல் குறித்து பயப்பட வேண்டாம். அது உங்கள் நல்லதுக்காக. 8 முதல் 10 நாட்கள் நீங்கள் விலகி இருப்பீர்கள் அது நல்லது. ஏனென்றால் அது உங்களுக்கும் மற்றும் உங்களை சுற்றி இருக்கும் மக்களும் நல்லது. வைரஸை வெறுங்க. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்காதீங்க. அவர்களுக்கு உதவ முயற்சி செய்யுங்க, பொறுமையா இருங்க. உங்களுக்கு வைரஸ் இருப்பதாக சந்தேகம் இருந்தால் முன்னால் வாங்க, பயப்படாதீங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார்.