நாடு இருக்கிற நிலைமையில ரஜினிக்கு இந்தக் கொண்டாட்டம் தேவையா!?

நாடு இருக்கிற நிலைமையில ரஜினிக்கு இந்தக் கொண்டாட்டம் தேவையா!?

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலால் இந்திய ராணுவத்தினர் 42 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து,இந்திய நடத்திய அட்டாக்கும்,அதில் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர் அபிநந்தன் உயிருடன் நாடு திருப்ப வேண்டும் என்று தமிழகம் தாண்டி ஒட்டு மொத்த இந்தியாவும் கடந்த இரண்டு வாரமாகவே பதட்டமாக இருந்ததை நாடே அறியும்.

இந்த நிலையில் பாகிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக அபிநந்தனை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒப்படைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்ததை தொடர்ந்து நேற்று பதட்டம் சற்று கூடுதலாகவே இருந்தது. எத்தனை மணிக்கு ஒப்படைப்பார்கள் என்பது குறித்த தகவல்கள் குழப்பமாக இருந்ததும் பதட்டத்திற்கு ஒரு காரணம்!

இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினி ‘பேட்ட’ படத்தின் 50 வது நாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடிய செய்தியும் புகைப்படங்களும் வெளியானதைப் பார்த்து பலரும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்!அவரது,ரசிகர்கள் படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாடியிருப்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது!

petta

இதே போல்தான் அஜித்தின் ‘விஸ்வாசம்’படத்தின் வெற்றி விழாவை படத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர் கொண்ட டெக்னீஷியன் டீம் கொண்டாடியிருக்கிறார்கள்.அந்த விழாவில் அஜித் கலந்து கொண்டதாக தகவல் இல்லை!

petta

பிப்ரவரி மாதம் தாக்குதல் நடந்த அன்று மலை முக்கியமான விழா ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்துவிட்டார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.அதோடு அட்டாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் அத்தனைபேர் குடும்பத்திற்கும் முதல் ஆளாக தலா 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்ததும் அமிதாப்தான்! அதன் பிறகே அரசுகள் அறிவித்திருந்தது.

அரசியலுக்கு வரும் ஆசையில் உள்ள ரஜினி இந்தக் கொண்டாட்டத்தைத் தவிர்த்திருக்க வேண்டாமா! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!?