நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்கவுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது.

அதேபோல், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டபேரவைகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியிட்டது.

election commission

அதன்படி, ஆந்திரா (25), தெலங்கானா (17), அருணாச்சலப்பிரதேசம் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), சிக்கிம் (1), அசாம் (5), பிகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு-காஷ்மீர் (2), மகாராஷ்டிரா (7), மணிப்பூர் (1), ஒடிசா (4), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5) மற்றும் மேற்கு வங்கம் (2) ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் (1), லட்சத்தீவுகள் (1)  ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு நாளை காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது.

மேலும், ஆந்திரா (175), அருணாச்சலப் பிரதேசம் (60), சிக்கிம் (32) ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசாவில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

vote

தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், துணை ராணுவப்படையினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதையொட்டி, எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், ட்விட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் வழியிலான பிரசாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது, 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதியும், நான்காம் கட்ட வாக்குப்பதிவு     9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு மே 6-ம் தேதியும், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதியும், ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

இதையும் வாசிங்க

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தாரா; மு.க.ஸ்டாலின் கேள்வி!