நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; வாக்குப்பதிவு தொடங்கியது!

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; வாக்குப்பதிவு தொடங்கியது!

நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களுக்கு ஏப்ரல் 11-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது

இடாநகர்: மக்களவை தேர்தலை முன்னிட்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்தோ-திபெத் எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது.

நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களுக்கு ஏப்ரல் 11-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சிகள் தவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Indo Tibetan border police

வாக்குப்பதிவின் போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் கலந்து கொள்ள முடியாது என்பதால், தபால் மூலம் வாக்களிக்க சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி, எல்லை பாதுகாப்பு படையினரின் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

Indo Tibetan border police

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக  ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி, அம்மாநிலத்தில் உள்ள லோஹித்பூரில் அமைக்கப்பட்டு இருந்த பிரத்யேக வாக்கு சாவடியில், தங்களது தபால் வாக்குகளை வாக்கு சீட்டு முறையில், தங்கள் அதிகாரிகள் முன்னிலையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம், மக்களவைத் தேர்தலுக்கான முதல் வாக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதையும் வாசிங்க

எங்கப்பா வேட்பாளர்..அட கைய இறக்குங்க; அன்புமணி பிரசாரத்தில் சிட்டிங் எம்.பி.,-க்கு வந்த சோதனை!