நாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக தொகுதி பங்கீடு விபரம்

 

நாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக தொகுதி பங்கீடு விபரம்

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் வேகம் காட்டி வருகிறது. அதிமுக தரப்பு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேமுதிக கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திமுக தரப்பு கூட்டணி வேலைகளை நிறைவு செய்துள்ளது.

திமுகவின் தொகுதி பங்கீடு விபரங்கள் பின்வருமாறு:

திமுக – 20
விசிக – 2
காங்கிரஸ் – 10
இந்திய கம்யூனிஸ்ட் – 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2
முஸ்லீம் லீக் – 1
இந்திய ஜனநாயக கட்சி – 1
மதிமுக – 1
கொங்கு மக்கள் கட்சி – 1 முறையே 40 தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய விபரங்கள் நாளைக்குள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.