நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும்: சந்திரபாபு நாயுடு ஆரூடம்

 

நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும்: சந்திரபாபு நாயுடு ஆரூடம்

நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நரேந்திர மோடி அரசு தோல்வியை சந்திக்கும் என் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திரா: நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நரேந்திர மோடி அரசு தோல்வியை சந்திக்கும் என் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் தற்போதில் இருந்தே எதிர்க்கட்சியினர் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்திய அளவில் 3-வது அணி அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயன்று வருகிறார். மேலும் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தனால் அதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் சந்திரபாபுநாயுடு பேசுகையில், மாநில பிரிவினை சட்டப்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வந்தோம். ஆனால் மத்திய அரசு மாநில சிறப்பு அந்தஸ்தை தராமல் ஏமாற்றியதால் கூட்டணியில் இருந்து விலகினோம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். மோடியை பார்த்து எனக்கு எந்த பயமும் கிடையாது. நான் முதல்வர் ஆன 7 ஆண்டுக்கு பிறகுதான் அவர் குஜராத் முதல்வராக பதவி ஏற்றார். அவரை விட எனக்கு அனுபவம் அதிகம் என்றார்.