நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி

 

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி

நடிகர் பிரகாஷ் ராஜ் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்.

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கவுரியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பிரகாஷ் ராஜ், பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும், இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சனம் செய்தார். மேலும் தான் வாங்கிய 5 தேசிய விருதுகளை திருப்பி தர தயங்கமாட்டேன் எனவும் கொந்தளித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பல மேடைகளில் இந்துத்துவத்திற்கு எதிராகவும், பாஜக, மோடிக்கு எதிராகவும் அதிரடியாக பேசி வந்தார்.

இந்நிலையில், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்களது ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன். தொகுதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். குடிமகனின் குரல் நாடாளுமன்றத்தில்கூட ஒலிக்கும் என பதிவிட்டுள்ளார்