நாடாளுமன்ற எம்பியாகிறார் ஏ.சி. சண்முகம்! பாஜகவின் திருவிளையாடல்!! 

நாடாளுமன்ற எம்பியாகிறார் ஏ.சி. சண்முகம்! பாஜகவின் திருவிளையாடல்!! 

வேலூர் மக்களவை  தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்திடம் தோற்றார்.  

நாடாளுமன்ற எம்பியாகிறார் ஏ.சி. சண்முகம்! பாஜகவின் திருவிளையாடல்!! 

வேலூர் மக்களவை  தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்திடம் தோற்றார்.  

இந்நிலையில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் நேற்று   செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சிறுபான்மையினர் மாலை  4 மணி வரை வாக்களிக்க வரவில்லை.  இதற்கு காரணம் முத்தலாக், காஷ்மீர் விவகாரமாக இருக்கலாம். அவர்கள் தேர்தலை புறக்கணிப்பது போல இருந்தார்கள். இதையடுத்து சில தலைவர்கள் அவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். ஆம்பூர், வாணியம்பாடியில்  இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தி.மு.க வெற்றி பெற்றிருக்காது. சுமார் 15000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கும்’ என்றார். 

தேர்தல் நேரங்களில் பாஜகவுக்கு பொருளாதார ரீதியாக பக்கபலமாக இருந்ததாலும், செல்வாக்குள்ள மனிதர் என்பதாலும்  ஏ.சி.சண்முகத்திற்கு பாஜக மாநிலங்களவையில் சீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடாக மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.