நாடாளுமன்றத்தில் வேலை செய்ய ஆசையா? – இது உங்களுக்குத்தான்!

 

நாடாளுமன்றத்தில் வேலை செய்ய ஆசையா? – இது உங்களுக்குத்தான்!

நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது. உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பல்வேறு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது. உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

parliment

நாடாளுமன்றத்தில் பல்வேறு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதன் படி, நாடாளுமன்ற அருங்காட்சியகம் சேவையில் க்யூரேட்டோரியல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 13, 2020. 

museum

க்யூரேட்டோரியல் உதவியாளர்:
வரலாறு பாடப் பிரிவில் முதுநிலை பெற்றிருக்க வேண்டும். தற்கால இந்திய வரலாறு அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் அல்லது இளநிலை வரலாறு மற்றும் முதுநிலை மியூசியாலஜி பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். 
பாதுகாப்பு உதவியாளர்:
வேதியியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான துறையில் இரண்டு ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

job

தொழில்நுட்ப உதவியாளர்:
கணினி அறிவியலில் இளநிலை பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு http://loksabhadocs.nic.in  என்ற இணையதளத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.