நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்! வைரலாகும் புகைப்படங்கள்

 

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்! வைரலாகும் புகைப்படங்கள்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பெண் எம்பி ஒருவர்  விவாதத்தில் பங்கேற்றபோது,  அவரது குழந்தைக்கு சபாநாயகர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டிமாடி கோபிக்கு கடந்த ஜூலை மாதம் ஆண்குழந்தை பிறந்துள்ளது. பேறுகால விடுமுறையிலிருந்த அவர், தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர், பங்கேற்று பேசினார்.

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்! வைரலாகும் புகைப்படங்கள்

அப்போது அவரது குழந்தையை வாங்கிக்கொண்ட சபாநாயகர் ட்ரிவர் மாலர்ட், தனது மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு பாட்டிலில் பாலூட்டினார். அதன்பின் தாலாட்டி குழந்தையை தூங்க வைத்தார். நாடாளுமன்ற கூட்டத்திலும் கவனம் செலுத்தி குழந்தையையும் பராமரித்த அவரது செயல் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.