நாசா ஆராய்ச்சியில் கடல் யானைகளா?! புதிய தகவல்!

நாசா ஆராய்ச்சியில் கடல் யானைகளா?! புதிய தகவல்!

புவி வெப்பமடைதல் பற்றி இப்போது பேசாத ஆட்களே  இல்லை, எங்கு பார்த்தாலும் புவி வெப்பமடைதல் பற்றிய விழிப்புணர்வுகள் நடக்கின்றன இருந்தும் நாம் அதற்கு செவி சாய்ப்பதில்லை என்பதே உண்மை! இப்படியே போனால் பூமியில் வாழ்வதற்கே இடமில்லாமல் போய்டும் என்பதே மறுக்க முடியாத உண்மை!

sea elephant

நாசாவின் ஜேபிஎல் ஆய்வகத்தின் (JPL-Jet Propulsion Laboratory)  ஒசானோக்ராபர் கடற் யானையை தன்  ஆய்விற்காக உபயோகித்தார். இந்த ஆய்வு 3 மாதங்கள் நடந்தது.தி டெட் கான்டினென்ட(தி dead continent) என்றழைக்கப்படும் அண்டார்டிக்கா ஒரு பனி படர்ந்த பிரதேசம், இதன் பனிக்கட்டிகள் நாம் செய்யும் மாசுபாட்டினால் ஒவ்வொரு வருடமும் உருகி கடல் நீர் மட்டம்  உயர்ந்து வருகிறது இப்படியே சென்றால்,உலகம் அழியும் நிலை வெகு விரைவில் வந்துவிடும்! 

sea elephant

நாசாவின் ஓசானோக்ராபர்  கடல் வெப்பநிலை மாறுபாட்டையும், அதன் நீரோட்டங்களையும் ஆய்வு செய்வதற்கு அங்கிருக்கும் கடல் யானையை உபயோகித்துள்ளார் அதன் தலை மீது ஒரு சிறிய தொப்பி போன்ற வடிவிலுள்ள சென்சாரை பொருத்தி 3 மாதங்கள் கண்காணித்து ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளார். அந்த கடல் யானை அண்டார்டிக்காவின் கடலில் 3,000மைல் தூரம் நீந்தி தகவல்களை சேர்த்துள்ளது, சென்சார்  பொருத்தப்பட்ட கடல் யானை மூலம் கடலின் ஆழம், கடலின் வெப்பமும் கணக்கெடுக்கப்பட்டது. 

அவர் மேற்கொண்ட ஆய்வில் “கடலின் மேற்பரப்பில் வெதுவெதுப்பான நிலை உள்ளதாகவும், இதனால் மேற்கொண்டு கடல் சூரிய சக்தியை எடுத்துக்கொள்வது கட்டுக்குள் வரும்” என்று தெரியவந்துள்ளது.