நாங்க 10 லட்சம் மாஸ்க் கேட்டோம்…. ஆனால் 10 ஆயிரம்தான் தந்தாங்க…. பிரதமரிடம் புகார்களை அடுக்கிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்….

 

நாங்க 10 லட்சம் மாஸ்க் கேட்டோம்…. ஆனால் 10 ஆயிரம்தான் தந்தாங்க…. பிரதமரிடம் புகார்களை அடுக்கிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்….

பிரதமர் நரேந்திர மோடியிடம் வீடியோ கான்பரன்சிங் பேசியபோது, நாங்க 10 லட்சம் என்-95 மாஸ்க் கேட்டோம் ஆனால் மத்திய அரசிடம் இருந்து 10 ஆயிரம் கிடைத்தது உள்ளிட்ட பெரிய புகார் பட்டியலை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நேற்று கலந்துரையாடினார். தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உள்பட பல மாநில முதல்வர்கள் பிரதமருடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலான மாநில முதல்வர்கள் கூடுதல் நிதி தவிர வேறு எந்தவொரு பெரிய கோரிக்கைகளையும் வைக்கவில்லை என தகவல்.

வீடியோ கான்பரங்சிங்கில்  முதல்வர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி

அதேசமயம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமருடன் கலந்துரையாடும்போது, மத்திய அரசு மீது பெரிய புகார் பட்டியலை தெரிவித்தார். அவை அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களுக்கு தேவையான மருத்து கருவிகள் போதிய அளவில் மத்திய அரசு தரவில்லை என்பதாக இருந்தது. நாங்கள் 5 லட்சம் பிபிஇ கருவி கேட்டோம் ஆனால் எங்களுக்கு வந்தது 4 ஆயிரம்தான். என்-95 மாஸ்க் 10 லட்சம் கேட்டோம் ஆனால் 10 ஆயிரம்தான் கிடைத்தது. அதேபோல் பி.எல். மாஸ்க் 10 லட்சம் வேண்டும் என்றோம் ஆனால் மத்திய அரசு கொடுத்தது 1 லட்சம்தான், 10 ஆயிரம் பி.என்.ஆர். பிரித்தெடுத்தல் கருவி கேட்டதற்கு 250 தான் பீகார் கிடைத்தது என நிதிஷ் புகார் தெரிவித்தார்.

என்-95 மாஸ்க்

அதேசமயம் நிதிஷ் குமார் தனது பேச்சின் போது, நாடு அனைத்து சவால்களையும் சமாளிக்கும், தொற்றுநோயை சமாளிக்கும் என தனது நம்பிக்கை தெரிவித்தார். நிதிஷ் குமாருடன் உரையாடலை முடிக்கும்போது நீங்கள் சொன்னது நிறைவேறட்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.