நாங்க ரெடி நீங்க ரெடியா? விஜய்க்கு தமிழிசை சவால்

 

நாங்க ரெடி நீங்க ரெடியா? விஜய்க்கு தமிழிசை சவால்

அரசியலில் மோத நாங்க ரெடி நீங்கள் ரெடியா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.

சென்னை: அரசியலில் மோத நாங்க ரெடி நீங்கள் ரெடியா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.

சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நான் முதல்வரானால் நடிக்கமாட்டேன் உண்மையாக இருப்பேன் என நடிகர் விஜய் பேசியதுதான் தற்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அரசியல் குறித்து பேசலாம் என்கிற சூழல் இருக்கும் நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலோ, இல்லை அரசியல் குறித்து பேசினாலோ கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வந்து களம் எப்படி என தெரிந்து கொள்ளட்டும். நடிப்பதற்கும் அரசியல் செய்வதற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்பதை அனுபவரீதியாக புரிந்து கொள்ளட்டும். எனவே போட்டிக்கு வாருங்கள். நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா? என்றார்.