நாங்க முதல்ல போரை துவங்க மாட்டோம்ன்னு சொல்லிவிட்டு எல்லையில் பதுங்கு குழிகளை அமைக்கும் பாகிஸ்தான்

 

நாங்க முதல்ல போரை துவங்க மாட்டோம்ன்னு சொல்லிவிட்டு எல்லையில் பதுங்கு குழிகளை அமைக்கும் பாகிஸ்தான்

நாங்க முதல்ல போரை துவங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, மறுபுறம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பதுங்குகுழிகளை பாகிஸ்தான் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இந்தியாவுடான வர்த்தக உறவை நிறுத்துவதாக அறிவித்தார். மேலும் அந்நாட்டு சாலை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அந்த சாலைகள் மற்றும் இந்திய விமானங்களுக்கு தன் வான் வழியை மூடுவதும் தொடர்பாகவும் பாகிஸ்தான் பரிசீலனை செய்து வருகிறது.

பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவ வீரர்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு இந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருந்தார். இந்நிலையில், நேற்று நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தை மற்றும் ராணுவ நடவடிக்கையை முதலில் மேற்கொள்ள மாட்டோம் என மாற்றி பேசினார். ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ அதற்கு எதிர்மாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

கார்கில் பகுதிக்கு எதிரே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆயுத கிடங்குகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தங்களது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்டோரா செக்டாரில் ஸ்க்ருடு பார்வேர்டு பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்து வருகிறது. இந்த பகுதி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளது.

பாதுகாப்பு பணியில் இந்திய வீரர்கள்

இது குறித்து இந்திய ராணுவம் வட்டாரம் கூறுகையில், தேவைப்பட்டால் அந்த பகுதியில் ராணுவத்தை குவிக்க அல்லது வெடிப்பொருட்களை வைக்க அந்த பதுங்கு குழிகளை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் என தெரிவித்தது.