நாங்க மிசாவ பார்த்தவங்க; வருமான வரித்துறை சோதனை குறித்து துரைமுருகன்

 

நாங்க மிசாவ பார்த்தவங்க; வருமான வரித்துறை சோதனை குறித்து துரைமுருகன்

களத்திலே எங்களை எதிர்க்கத் துணிவில்லாது மத்திய, மாநில அரசுகளோடு உறவு கொண்டுள்ள சில கடைந்தெடுத்த கழிசடை அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி இது. நேருக்கு நேர் மோத முடியாமல், அதிகாரிகளை விட்டு வீழ்த்த நினைக்கிறார்கள்

திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் உடைமைகளில் வருமான வரிதுதுறையினர் சோதனை நடத்தினர். இதில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு தொடங்கிய இந்த சோதனை, காலை வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

durai

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன்,  நாங்கள் தவறாக வந்துவிட்டோம் என்று அதிகாரிகள் சென்றுவிட்டனர். சோதனை நடத்த வேண்டிய காலம் இதுவல்ல. தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு கல்லூரியை நடத்தி வருகிறோம். இந்த நேரத்தில் எங்களின் வீட்டில் நுழைய வேண்டிய அவசியம் என்ன? போன மாதம் வந்திருக்கலாம்.

கதிர் ஆனந்த் தேர்தலில் நிற்கிறார்; அவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதை திசை திருப்பவே இந்த வருமான வரித்துறை சோதனை நாடகம்.

durai

களத்திலே எங்களை எதிர்க்கத் துணிவில்லாது மத்திய, மாநில அரசுகளோடு உறவு கொண்டுள்ள சில கடைந்தெடுத்த கழிசடை அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி இது. நேருக்கு நேர் மோத முடியாமல், அதிகாரிகளை விட்டு வீழ்த்த நினைக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு இப்போது யார் துரோகி என்பது நன்றாக தெரியும். இப்படி மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவது இதெற்கெல்லாம் திமுகவின் அடிமட்டத் தொண்டன் கூட பயப்படமாட்டான்.

d

எனக்கே பூச்சாண்டி காட்டுகிறீர்களா? நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள்; அடக்குமுறையை எதிர்கொண்டவர்கள் என்றார்.

இதையும் வாசிங்க: #DuraiMurugan நெருங்கி வரும் தேர்தல்: துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை: மத்திய மாநில அரசுகளின் சதியா?