நாங்க மட்டுமா கடன்ல இருக்கோம் தமிழ்நாட்டுல உள்ள  பாதி கல்லூரி கடன்லதான் இருக்கு- பிரேமலதா

நாங்க மட்டுமா கடன்ல இருக்கோம் தமிழ்நாட்டுல உள்ள  பாதி கல்லூரி கடன்லதான் இருக்கு- பிரேமலதா

தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம் என வெளியான தகவல் குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய் பிரேமலதா விஜயகாந்த், “எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது; சட்டப்பூர்வமாக இந்த பிரச்னையை சந்தித்து மீண்டு வருவோம். கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம், கடன் பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். நேர்மையானவர்களுக்கு சோதனைகள் வரும், ஆனால் கடவுள் கைவிடமாட்டார்.

எங்க கல்லூரி அடிப்படை வசதிகளுக்காக தான் கடன் வாங்கினோம். 20 ஆண்டு இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயங்கிவரும் பல கல்லுரிகளின் நிலை இது தான். இன்ஜினியர் படித்த இளைஞர்கள் வேலை இல்லையே அது தான் காரணம். கஷ்டப்பட்டு இந்த கடனை கட்டி கல்லூரியை தொடர்ந்து செயல்படுத்துவோம்.  வங்கியிடம் கால அவகாசம் கேட்டோம். கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த மாதம் வரை கால அவகாசம் உள்ளது, அதனால் நிச்சயம் இந்த பிரச்சனை நல்லதாக முடியும்” என்றார்.