நாங்க புதுசா எந்த அறிவிப்பையும் வெளியிடல…. ஏற்கனவே என்ன செஞ்சமோ அத சொல்றோம்! அவ்வளவுதான்- நிர்மலா சீதாராமன் மைண்ட் வாய்ஸ்

 

நாங்க புதுசா எந்த அறிவிப்பையும் வெளியிடல…. ஏற்கனவே என்ன செஞ்சமோ அத சொல்றோம்! அவ்வளவுதான்- நிர்மலா சீதாராமன் மைண்ட் வாய்ஸ்

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். இதை எதிர்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிவாரண திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். இதை எதிர்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிவாரண திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று (மே13) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்கட்ட நிவாரண திட்டங்களை அறிவித்தார். அதில், சிறு குறு, நடுத்தர தொழில்துறைக்கு கடன் உதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். மொத்தம் 3.6 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

நிர்மலா

இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் , “12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலமாக 3 கோடி முகக்கவசங்கள் , 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கிய 7,200 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் முயற்சி நடைபெற்றுவருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்தை விட நடப்பு மே மாதத்தில் 40%- 50% வரை கூடுதலான மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.” எனக்கூறினார்.