நாங்க தேர்தலில் தோற்பது இது முதல் முறையல்ல…… அமித் ஷா விளக்கம்

 

நாங்க தேர்தலில் தோற்பது இது முதல் முறையல்ல…… அமித் ஷா விளக்கம்

நாங்க தேர்தலில் தோல்வி தோற்பது இது முதல் முறையல்ல. பீகார் மற்றும் சில மாநிலங்களில் நாங்கள் தோற்றுள்ளோம் என அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற டைம்ஸ் நவ் உச்சிமாநாடு 2020ல் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளித்தார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி தொடர்பான கேள்விக்கு அமித் ஷா கூறியதாவது: டெல்லி தேர்தல் முடிவுகளை நான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

பா.ஜ.க.

பல கட்சிகளுக்கு தேர்தல் என்பது ஒரு அரசாங்கத்தை அமைப்பதாகும். பா.ஜ.க. தேர்தலில் வெறும்  வெற்றி அல்லது தோல்விக்காக போட்டியிடாது. டெல்லி மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலிலும் எங்களது இதயம் மற்றும் ஆன்மாவை வைக்கிறோம். நாங்கள் தேர்தலில் தோற்பது இது முறையல்ல. பீகார் மற்றும் இதர மாநிலங்களிலும் தோல்வி கண்டுள்ளோம். பா.ஜ.க. அதன் சித்தாந்தததை விரிவுப்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சி. 

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி தேர்தல் முடிவுகள் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்களின் தீர்ப்பு மற்றும் டெல்லி மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்து விட்டனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் 3வது இடத்தில் இருந்தார். அதற்காக அவர் டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்டார் என்று அர்த்தமல்ல. தேர்தல் முடிவுகள் சித்தாந்தங்களின் பிரதிபலிப்பு அல்ல. நாங்கள் எப்போதும் எங்கள் சித்தாந்தத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.