நாங்க தனியாலாம் போட்டியிடல… கூட்டணிதான்! தடுமாறுகிறாரா ரஜினிகாந்த்?

 

நாங்க தனியாலாம் போட்டியிடல… கூட்டணிதான்! தடுமாறுகிறாரா ரஜினிகாந்த்?

கடந்த 2017  ஆம் ஆண்டு டிசம்பர் 31 அம் தேதி தான் அரசியலுக்கு வரவுள்ளதாக ரசிகர்கள் முன்பு அறிவித்தார் ரஜினிகாந்த். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தார்.

கடந்த 2017  ஆம் ஆண்டு டிசம்பர் 31 அம் தேதி தான் அரசியலுக்கு வரவுள்ளதாக ரசிகர்கள் முன்பு அறிவித்தார் ரஜினிகாந்த். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தார். ரஜினி விரைவில் கட்சித்தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ரஜினி தலைமையில் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது . 

கூட்டம் முடிந்த பின்செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்,  “கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து பேசினேன்.  கட்சி தொடங்கும் விவகாரத்தில் நிர்வாகிகளுக்குப் பல விஷயங்களில்  திருப்தி. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி இல்லை. ஏமாற்றம் தான். அதை பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்” எனக்கூறினார். 

Rajinikanth

இந்நிலையில் முன்பு, 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என்று முன்பு ரஜினி கூறியிருந்த நிலையில், தற்போது கூட்டணி என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டறிந்தார். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவது குறித்து ஆலோசனை எனத் தகவ வெளியாகியுள்ளது.