நாங்க குடித்ததுக்கும் பில் கட்டு! – துப்பாக்கியை காட்டி மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்ளே

 

நாங்க குடித்ததுக்கும் பில் கட்டு! – துப்பாக்கியை காட்டி மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்ளே

சினிமா விநியோகஸ்தர் ஒருவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் குடித்துவிட்டு பில்லை கட்டும்படி தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டி.நகரைச் சேர்ந்தர் ஹேமந்த். இவர் இன்டீரியர் டெகரேஷன் தொழில் செய்து வருகிறார். தன்னுடைய நண்பர்களுடன் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று மது அருந்தியுள்ளார்.

சினிமா விநியோகஸ்தர் ஒருவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் குடித்துவிட்டு பில்லை கட்டும்படி தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டி.நகரைச் சேர்ந்தர் ஹேமந்த். இவர் இன்டீரியர் டெகரேஷன் தொழில் செய்து வருகிறார். தன்னுடைய நண்பர்களுடன் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது, அவர்களுக்கு அருகே பிரவீன், சீனிவாசனுடன் உள்ளிட்ட ஐந்து பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். போதை உச்சத்துக்கு சென்ற நிலையில், தன்னுடைய பார் பில்லை செலுத்தும்படி ஹேமந்திடம் கூறியுள்ளார் பிரவீன். ஆனால் எதற்காக நான் உங்களுக்கு பணம் செலுத்த வேண்டும், என்னிடம் பணம் இல்லை என்று ஹேமந்த் கூறியுள்ளார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

pravin and srinivasan

உடனே பிரவீன், சீனிவாசன் உடன் வந்தவர்கள் வேக வேகமாக கார் நிறுத்தத்துக்குச் சென்று வண்டியில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துவந்து மிரட்டியுள்ளனர். பிரச்னை பெரிதாகவே ஹோட்டலில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வருவதை தெரிந்து பிரவீன், சீனிவாசன் ஆகியோர் தப்பி ஓடினர். பின்னர் சம்பவம் குறித்து ஹேமந்த் தேனாம்பேட்டை போலீலில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இருவரையும் தேடினர். அவர்கள் இருவரும் அந்த ஹோட்டலிலேயே தங்கி இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிரவீன் சினிமா விநியோகஸ்தராகவும் சீனிவாசன் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனம் நடத்துபவர் என்றும் தெரியவந்துள்ளது. போதையில் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.