நாங்க இல்ல குமாரு, எங்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கலாம் – ஈரானிடம் ட்ரம்ப் நெக்கலு!

 

நாங்க இல்ல குமாரு, எங்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கலாம் – ஈரானிடம் ட்ரம்ப் நெக்கலு!

ஈரானின் செயற்கைகோள் விபத்திற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்றும், காரணத்தை கண்டுபிடிக்க ஈரானுக்கு வாழ்த்துகள் என்றும் நக்கலடித்துள்ளார் ட்ரம்ப். அதாவது செயற்கைகோள் வெடித்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால், எங்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்கள் யாருக்காவது தொடர்பிருக்கலாம் என்பதுதான் ட்ரம்ப் சொல்லவருவது.

 ஈரானின் இமாம் கொமேனி விண்வெளி மையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஏவப்பட்ட செயற்கைக்கோள், ஏவுதளத்திலேயே ராக்கெட்டோடு வெடித்துச் சிதறியது. இது இந்த ஆண்டின் மூன்றாவது தோல்வி. இந்நிலையில், ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்த ஏவுதளத்தின் புகைப்படத்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்தோடு விட்டாரா ட்ரம்ப்? சஃபீர் எஸ்எல்வி ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட தயாரிப்புகளின்போது நிகழ்ந்த விபத்திற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்றும், காரணத்தை கண்டுபிடிக்க ஈரானுக்கு வாழ்த்துகள் என்றும் நக்கலடித்துள்ளார் ட்ரம்ப். அதாவது செயற்கைகோள் வெடித்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால், எங்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்கள் யாருக்காவது தொடர்பிருக்கலாம் என்பதுதான் ட்ரம்ப் சொல்லவருவது.

Trump releases classified photo

இதனிடையே, உளவுத்துறையினர் ட்ரம்ப்பிடம் அந்த புகைப்படத்தை  காட்டியபோது உடன் இருந்தவர்கள் யாரோ செல்போன்மூலம் படம்பிடித்த தகவல் வெளியாக, அந்த யாரோ ஒருவர் ஏன் ட்ரம்ப்பாக இருக்கக்கூடாது என்றும் அமெரிக்காவில் அடுத்த புகைச்சல் கிளம்பியுள்ளது. ஈரானுக்கு நேரடியாக வாழ்த்துச்செய்தியுடன், இந்த புகைப்படத்தை டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டது ஏன், அந்த புகைப்படம் அவரே எடுத்ததா என்ற கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்க மறுத்துவிட்டது. ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புகைப்படம் வெளியிட தனக்கு முழு உரிமை இருப்பதாகவும், அந்தப்பக்கமிருந்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் எனவும் கூறிவிட்டார். அவர் குறிப்பிட்டார்.