நாங்க ஆட்சிக்கு வந்ததே நாட்டை காவிமயமாக்கத்தான்… யாருக்காவது பிரச்சனை இருந்தா அப்படியே இருங்க… பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு….

 

நாங்க ஆட்சிக்கு வந்ததே நாட்டை காவிமயமாக்கத்தான்… யாருக்காவது பிரச்சனை இருந்தா அப்படியே இருங்க… பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு….

நாட்டை காவி மயமாக்க நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். இதில் யாருக்காவது பிரச்சனை இருந்தா அப்படியே இருங்க என அரியானா பா.ஜ.க. அமைச்சர் கூறியுள்ளார்.

அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநில கல்வி துறை அமைச்சராக இருப்பவர் கன்வார் பால் குஜ்ஜார். அதிரடியாக பேசி சர்ச்சைகளை கிளப்பி வருபவர் கன்வார் பால் குஜ்ஜார். சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்வார் பால் குஜ்ஜார்  பேசுகையில் கூறியதாவது:

பா.ஜ.க.

காவிமயமாக்கலில் சில மக்களுக்கு பிரச்சனை உள்ளது. காவிமயமாக்கல் நடைபெறுவதாக அவர்கள் சொல்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததே காவிமயமாக்கத்தான். நாம் ஏன் ஆட்சி வந்தோம்? நாட்டை காவிமயமாக்கத்தான். நம் நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக ஆட்சிக்கு வந்துள்ளோம். இதனை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து அப்படியே இருக்கலாம்.

ரஞ்சித் சவுதாலா

காவி உடையை அணிந்தவர் குருவாக போற்றப்படுகிறார். ஒருவர் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவர் ஒருமுறை காவி உடை அணிந்தால் இயற்கையாகவே அவர் மதிக்கப்படும் நபராக மாறிவிடுவார். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாத தொடக்கத்தில் அரியானா மின்துறை அமைச்சர் ரஞ்ஜித், மின் கட்டணம் செலுத்தாவர்களின் குழந்தைகளை போட்டி தேர்வுகள் எழுத அனுமதிக்க கூடாது என்று  கூறியிருந்தார். அவரது கருத்துக்கு கன்வார் பால் குஜ்ஜார் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.