நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

 

நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

 வேட்பு மனு மீதான  பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எம்பியாகி விட்டதால் அந்த தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததையடுத்து  அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல்  நடக்கும் சூழல் ஏற்பட்டது. 

ec

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய  அவர், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும்  அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல்  நடக்கும் என்று அறிவித்தார். அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  வேட்பு மனு மீதான  பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

dmk

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  இதனால் தமிழக கட்சிகள் விரைவில் இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.