நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை! ஊழல் நாடக தேர்தல் என கமல் விமர்சனம்

 

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை! ஊழல் நாடக தேர்தல் என கமல் விமர்சனம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எம்பியாகி விட்டதால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததையடுத்து  அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல்  நடக்கும் சூழல் ஏற்பட்டது. 

இந்நிலையில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும்  அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல்  நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  வேட்பு மனு மீதான  பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

kamal

இந்நிலையில் இந்த இரு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக முன்னேறி வருகிறது.  எனவே நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களது தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஆட்சியிலிருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது” என்று தெரிவித்துள்ளார்.