நாங்குநேரியில் குழி பறிக்கும் பொன்.ராதா… பதற வைக்கும் பாஜக… அதிர்ச்சியில் அதிமுக..!

 

நாங்குநேரியில் குழி பறிக்கும் பொன்.ராதா… பதற வைக்கும் பாஜக…  அதிர்ச்சியில் அதிமுக..!

பாஜக ஜெயித்தால் தமிழகத்தில் கால் ஊன்ற தொடங்கிவிட்டோம் என்று டெல்லிக்கு சிக்னல் கொடுக்கலாம் நினைத்தார்களாம். ஆனால் பாஜகவின் நினைப்பில் மண் விழுந்ததுபோல அங்கு அதிமுக நிற்கிறது.

நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்டு அதிமுக விட்டுக் கொடுக்காததால் கடும் ஓபத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்பதாகவும், அதனை பொன்.ராதாகிருஷ்ணனின் பேட்டியே உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இரு தொகுதிகளிலும் அதிமுகதான் போட்டியிடுகிறது. நாங்குநேரியில் நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வனும் போட்டியிடுவார்கள் என அதிமுக சார்பில்  அறிவிக்கப்பட்டது.

pon radha

இதற்கிடையே இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழுமையாக பணியாற்றுவோம் என கூட்டணிக் கட்சிகளான பாமக, தமாகா ஆகியவை அறிவித்துவிட்டன. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கோரியுள்ளதன் மூலம் தேமுதிகவின் ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவின் நெருங்கிய கூட்டணிக் கட்சியான பாஜக இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

‘நாங்குநேரியில் அதிமுக போட்டியிடுவதால் கூட்டணி கட்சியான பாஜக தரப்பு  கடும் அதிருப்தியில் இருக்கிறது. அதிமுஅவில் இருந்து தாவி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை நாங்குநேரியில் நிறுத்தி விடலாம். ஏற்கெனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், மீண்டும் காங்கிரஸ் களமிறங்குவதாலும் இரண்டு தேசிய கட்சிகளில் பாஜக ஜெயித்தால் தமிழகத்தில் கால் ஊன்ற தொடங்கிவிட்டோம் என்று டெல்லிக்கு சிக்னல் கொடுக்கலாம் நினைத்தார்களாம். ஆனால் பாஜகவின்  நினைப்பில் மண் விழுந்ததுபோல அங்கு அதிமுக நிற்கிறது.modi

கூட்டணி கட்சியான பாஜகவுக்கு நாங்குநேரி தொகுதியை விட்டுத்தராமல் அதிமுக திடீரென வேட்பாளரை அறிவித்து விட்டது. இதை வாக்குபதிவின்போது காட்டுவோம் என்று மறைமுகமாக புலம்பி தள்ளி வருகிறார்களாம், பாஜக நிர்வாகிகள்.Pon radha

இதூறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நாங்குநேரி தொகுதியை கேட்பது தொடர்பாக பாஜகவின் சார்பில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதிமுகவிடம் நாங்குநேரி தொகுதியை கேட்டோம் என்பதெல்லாம் தவறான விஷயங்கள். இடைத் தேர்தல் தொடர்பாக எங்களுடைய அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதன் அடிப்படையில்தான் மற்ற விஷயங்கள் அமையும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றிபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் நாளன்று பாஜக என்ன செய்யப்போகிறதோ..!