‘நாங்கள் 7 ஆண்டுகளாக செத்து கொண்டிருக்கிறோம்’… தெலுங்கானா என்கவுண்டருக்கு நிர்பயா பெற்றோர் வரவேற்பு!

 

‘நாங்கள் 7 ஆண்டுகளாக செத்து  கொண்டிருக்கிறோம்’… தெலுங்கானா என்கவுண்டருக்கு  நிர்பயா பெற்றோர்  வரவேற்பு!

சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தப்பியோட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். 

பெண் மருத்துவர் எரித்துக்கொலைசெய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு நிர்பயாவின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

ttn

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தப்பியோட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ttn

இந்நிலையில்  கடந்த 2012ல் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி இந்த சம்பவத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், 4 பேரும்  சுட்டு கொல்லப்பட்டது  மகிழ்ச்சி. போலீசார் நல்ல காரியம் செய்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். நான் 7 வருடங்களாக காத்திருக்கிறேன். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வேண்டும் என்று ஒவ்வொரு நீதிமன்றமாக செல்கிறேன். ஆனால்  அது மனித உரிமை மீறலாம். தற்போது இந்த கொடூர தண்டனைகள் அவசியப்படுகிறது’ என்றார். 

நிர்பயாவின் தந்தையோ, ‘என்கவுன்டர் செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம். அந்த நிலைமை  நல்லவேளையாக அந்த பெற்றோருக்கு வரவில்லை’ என்றார்.