“நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா” திமுக எம்.பி தயாநிதிமாறனின் கருத்துக்கு திருமாவளவன் விமர்சனம்.. தயாநிதி வருத்தம்!

 

“நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா” திமுக எம்.பி தயாநிதிமாறனின் கருத்துக்கு திருமாவளவன் விமர்சனம்.. தயாநிதி வருத்தம்!

நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை திமுக எம்.பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம், தலைமை செயலாளரிடம் கொடுக்க சென்றிருந்தனர். தலைமை செயலகத்தில் அவரை சந்தித்த தி.மு.க எம்பிக்கள் அந்த மனுக்களில் இருக்கும் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அவரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். அந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, தலைமை செயலாளர் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதைய அளிக்கவில்லை என்று  கூறினார். 

அதனைத்தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், திமுக செய்து வரும் பணிகளை பார்த்து தலைமை செயலாளருக்கு பொறாமை என்றும் திமுக எம்.பி.க்கள் இருப்பதை மறந்து விட்டு சத்தம் போட்டு பேசியதாகவும் உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலை இல்லை என்று அவர் கூறியதாகவும் தலைமை செயலாளர் மீது குற்றம் சாட்டினார். அதுமட்டுமில்லாமல், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

ttn

இதனைப் பற்றி விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்.’ என்று பதிவிட்டுள்ளார். 

ttn

 இதற்கு தயாநிதி மாறன், நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா என்று தான் கூறியது யார் மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்றைய தினம் (13.05.20)தமிழக அரசின் தலைமைச்செயலாளரை சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின் போது,தலைமை செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.