நாங்கள் என்ன போஸ்ட்மேனா? – நீதிபதிகள் நியமனத்தில் எங்களுக்கும் உரிமை உண்டு! – ரவிசங்கர் பிரசாத் அதிரடி

நாங்கள் என்ன போஸ்ட்மேனா? – நீதிபதிகள் நியமனத்தில் எங்களுக்கும் உரிமை உண்டு! – ரவிசங்கர் பிரசாத் அதிரடி

உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாங்கள் தபால்காரராக செயல்பட முடியாது… அதில் எங்களுக்கும் உரிமை உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ravi

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யான் பானர்ஜி கேள்வி எழுப்பினார். 

kalyan

அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அப்போது, “நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு வெறும் தபால்காரர் கிடையாது. கருத்து கூற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம்தான் முடிவு செய்கிறது. இதில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ravi

அவர்கள் பரிந்துரைக்கும் நபரையே நீதிபதியாக அரசு நியமிக்கிறது. நீதிபதிகள் நியமனத்தில் நாங்களும் பங்குதாரர்கள்தான்… நாங்களும் கருத்து கூறுவோம்” என்றார். 
அமைச்சரின் இந்த பேச்சு நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் அமைந்திருப்பதாக நீதித்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.