நாங்கதான் மூன்றாவது பெரிய கட்சி! – பா.ம.க சொல்கிறது!

நாங்கதான் மூன்றாவது பெரிய கட்சி! – பா.ம.க சொல்கிறது!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க கூட்டணி அதிக இடங்களை அள்ளியது. தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வார்டுகளின் எண்ணிக்கைகள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் முக்கிய கட்சிகளான பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பெயர் இடம் பெறவில்லை. அவை எல்லாம் மற்றவை பட்டியலில் சேர்க்கப்பட்டன.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க கூட்டணி அதிக இடங்களை அள்ளியது. தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வார்டுகளின் எண்ணிக்கைகள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் முக்கிய கட்சிகளான பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பெயர் இடம் பெறவில்லை. அவை எல்லாம் மற்றவை பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில், பா.ம.க பெயர் விடுபட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியில் 16 இடங்களையும், ஒன்றிய உறுப்பினர் பதவியில் 217 இடங்களையும் பெற்றுள்ளது. ஆனால் பா.ம.க-வின் வெற்றி விவரம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படவில்லை” என்று கூறப்பட்டது.

ramadoss

வழக்கு தொடரப்பட்ட 15வது நிமிடத்தில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பா.ம.க வெற்றி விவரம் அறிவிக்கப்பட்டதாக பா.ம.க-வினர் கூறுகின்றனர். அதில், தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை வென்ற கட்சி என்று மூன்றாவது இடம் பா.ம.க-வுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பா.ம-வினர் கூறுகின்றனர். இதனால் மூன்றாவது பெரிய கட்சி என்று தமிழக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது என்பது போல அவர்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பாக வெளியான செய்தியை பா.ம.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கே.பாலு தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

உண்மையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பா.ம.க பெற்ற பெற்றிகள் பற்றி அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் அதில் இல்லை. காங்கிரஸ் கட்சி 15 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களை வென்றுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். 
இன்னும் பல மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. அதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் எப்போது நடக்கும் என்றே தெரியாத நிலை உள்ளது. அதற்குள்ளாக, ஒரே ஒரு வார்டை கூடுதலாக வென்றவிட்டு பா.ம.க செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.