நாகையில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும்: மின்வாரிய அதிகாரிகள்

 

நாகையில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும்: மின்வாரிய அதிகாரிகள்

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்: கஜா புயலால் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரையி வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவைகள் சாய்ந்து சாலையில் கிடக்கின்றன. மேலும் தொலைதொடர்பும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்கள் தனி தீவாகி உள்ளன.

இந்நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 46 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.