நாகர்கோயில் புனித சவேரியார் பேராலயத்தில் மத நல்லிணக்க விழா!

 

நாகர்கோயில் புனித சவேரியார் பேராலயத்தில் மத நல்லிணக்க விழா!

நாகர்கோயில் புனித சவேரியார் பேராலயத்தில் நடைபெற்று வரும் வருடாந்திர திருவிழாவில் நான்காம் நாளான நேற்று மத நல்லிணக்க விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம்  நாகர்கோயிலில் புகழ்பெற்ற புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது . இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி வரை பத்து நாட்கள் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான 10 நாள் திருவிழா கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. 

nagarcoil

இதனை தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் இந்த பேராலயத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 4-ம் நாள் திருவிழாவான நேற்று சமய நல்லிணக்க விழா நடைபெற்றது. கத்தோலிக்க சங்கம், கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் குமரி மாவட்ட திருவருட் பேரவை இணைந்து இந்த விழாவை மிகவும் சிறப்பாக நடத்தினர்.

விழாவுக்கு புனித சவேரியார் பேராலய பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இளங்கடை முஸ்லிம் ஜமாத் தலைவர் பாவலர் சித்திக், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, இணைபங்கு அருப்பணியாளர் ஆன்டனி பாபு, கோட்டார் வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஆஞ்சல் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். 

nagarcoil

நலத்திட்ட உதவியாக தையல் எந்திரம், அரிசி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக தேவசகாயம் மவுண்ட் வட்டார அருட்பணியாளர்கள் தலைமையில் மறையுரையாற்றப்பட்டது.

மத நல்லினகத்திற்கு எடுத்துகாட்டாக அமைந்திருந்த இந்த விழாவில் அனைத்து சமயத்தினை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்ததுடன் ஏராளாமான நல திட்ட உதவிகளையும் மக்கள் பெற்று சென்றனர்.