நஷ்டம்தான் ஆனாலும் வெற்றிகரமான நஷ்டம்தான்! டாடா மோட்டார்ஸ்

 

நஷ்டம்தான் ஆனாலும் வெற்றிகரமான நஷ்டம்தான்! டாடா மோட்டார்ஸ்

நாட்டின் முன்னிண வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.187.7 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1,009 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் (ஜூலை-செப்டம்பர்) இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகளை கடந்த சில தினங்களுக்கு முன் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.187.7 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. உள்நாட்டில் வாகன விற்பனை சரிவு கண்டதே இதற்கு காரணம். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,009 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

டாடா கார்ஸ்

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.65,431.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரிட்டிஷ் நிறுவனமான ஜகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.15.6 கோடி பவுண்ட் லாபம் பார்த்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் அந்த நிறுவனம் 1.34 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் கடந்த காலாண்டில் பெரிய அளவில் குறைந்துள்ளதால் நேற்று அந்நிறுவன பங்கின் விலை சுமார் 16 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் காலாண்டுகளில் டாடா மோட்டார்ஸ் சிறப்பான நிதிநிலை முடிவுகளை வெளியிடும் என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.