நவ கைலாய ஸ்தலமான முறப்பநாடு கைலாசநாதர் கோயிலில் புனித நீராட குவிந்து வரும் பக்தர்கள்!

 

நவ கைலாய ஸ்தலமான முறப்பநாடு கைலாசநாதர் கோயிலில் புனித நீராட குவிந்து வரும் பக்தர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தீர்த்தகட்டமான முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில், மஹா புஷ்கர விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தாமிரபரணி புஷ்கர விழா அக்டோபர் 11-ம் தேதி  தொடங்கி, வரும் 23-ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் நெல்லை மாவட்டம், பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 143 படித்துறைகள் பக்தர்கள் நீராடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை  29 இடங்களில்  உள்ள படித்துறைகளில் புஷ்கர விழா நடைபெறுகிறது.

murappanadu

இந்த 29 படித்துறைகளில், முறப்பநாடு தீர்த்தக்கட்டமும், ஸ்ரீவைகுண்டம் தீர்த்தகட்டமும்,  சிறப்புப் பெற்றதும் முக்கியமானதும் ஆகும். முறப்பநாட்டில் கைலாசநாதர் கோயிலின் முன்பு உள்ள தீர்த்தக்கட்டத்தில், ஸ்ரீதாமிரபரணீஸ்வரம் டிரஸ்ட் மற்றும் ஊர்கமிட்டி இணைந்து இந்தவிழாவினை நடத்தி வருகின்றனர். நவ கைலாய சிவ ஆலயங்களில், முறப்பநாட்டில் கைலாசநாதர் விசாலாட்சி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. 

murappnadu

இத்திருக்கோயில் குருவின் ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்குள்ள தாமிரபரணி நதி, கங்கை நதியைப் போல தெற்கு நோக்கிப் பாய்ந்து ஓடுகிறது. இதனால், இதை தட்சிண கங்கை எனச் சொல்கிறார்கள்.  இந்த நதியில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.