நவீன வசதிகளுடன் தயாராகும் தல அஜித்தின் சொகுசு பங்களா: என்னென்ன வசதிகள் தெரியுமா?

 

நவீன வசதிகளுடன் தயாராகும் தல அஜித்தின் சொகுசு பங்களா: என்னென்ன  வசதிகள் தெரியுமா?

நடிகர் அஜித் ஈசிஆர் பகுதியில் கட்டி கொண்டிருக்கும் சொகுசு பங்களாவின் விரைவில் குடியேற போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் அஜித் ஈசிஆர் பகுதியில் கட்டி கொண்டிருக்கும் சொகுசு பங்களாவின் விரைவில் குடியேற போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்  ஈசிஆர் பகுதியில் சொகுசு பங்களா கட்ட வேண்டும் என்ற கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.  இதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்தார். அஜித் கட்டி வரும் இந்த பங்களாவில் டப்பிங் ஸ்டுடியோ, மினி டிஜிட்டல் தியேட்டர், மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இனிமேல்  அஜித் படப்பிடிப்புக்கு மட்டுமே வெளியே செல்வார் என்றும் டப்பிங் உள்பட மற்ற அனைத்துப் பணிகளும் அவரது பங்களாவிலேயே நடைபெறும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்கு என ஒரு தனி செக்ஷனே இருக்கிறது என்றும்  பல நவீன வசதிகள் கொண்ட இந்த பங்களாவிற்கு அஜித் குடும்பம் விரைவில் குடியேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.