நவராத்திரி 2018 : சகல துன்பங்களையும் வேர் அறுக்கும் வல்லமை கொண்டவள் துர்க்கை!

 

நவராத்திரி 2018 : சகல துன்பங்களையும் வேர் அறுக்கும் வல்லமை கொண்டவள் துர்க்கை!

ராகுவின் அதி தேவதையாக கருதப்படும் துர்க்கையம்மனை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

துன்பங்களை மக்களுக்கு தருவதில் நிழல் கிரகமான ராகுவிற்கு அலாதி பிரியம் . நாம் செய்த முன்வினை பாவங்களுக்கு ஏற்ப நமக்கு துன்பங்களை தருவதில் அசுர கிரகமான ராகு ஒரு போதும் அஞ்சுவதில்லை. 

durgagaiyjk

பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் என்றடையும் போது, ராகுவால் வரக் கூடியத் துன்பங்களைக் களைவதில் முன்னிருப்பவள் துர்க்கையம்மன் மட்டுமே.

குடும்ப நன்மைக்காக வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி ஊதுவத்தி, மஞ்சள் சாமந்திப்பூ, மல்லிகைப்பூ ,மஞ்சள் தூள் சமர்ப்பித்து ஏழு, அல்லது ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்து வர குடும்பத்தில் ஒற்றுமை கூடும். 

தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பின் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நெய்விளக்கு எலுமிச்சம்பழத்தில் ஏற்றி வர நோயின் தீவிரம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் கிட்டும். 

durgai

குடும்பப் பிரச்சனைகள் வம்பு,வழக்கு,கடன் என குடும்பத்தின் உறுப்பினர்களினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றுவது மிகுந்த பலன்களை தரும். தீயப் பழக்கங்களை கைவிட்டு துர்கையை  நம்பி பரிகாரம் செய்யும் போது மகத்தான பலன்கள் நமக்கு கிடைக்கும்.

துர்க்கையை பூஜிக்க உகந்த காலம் ராகு காலம் ஆகும். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும்.

 துர்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் துர்கையை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் ஆகும்.
மேலும் அவளுக்கே உரித்தான அமாவாசை,பௌர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்கு சிறந்த நாட்களாகும்.

durgagjyi

துர்க்கையம்மன் கோயில் தனியாக இருக்கும் ஆலயங்களிலும் அல்லது சிவாலயங்களில் உள்ள துர்க்கை சன்னதியிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் நமது வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் பெறலாம் என்கிறது நமது மூல நூல்கள்.

கீழ்க்கண்ட துர்க்கை அம்மன் ஸ்லோகத்தினை ராகு கால வேலைகளில் பாராயணம் செய்து வர நம்முடைய வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெறலாம் என்கிறது தேவி புராணம்.

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
 தன்னோ மாரி ப்ரசோதயாத்