நவராத்திரி ஸ்பெஷல்: பெண் குழந்தையை தெய்வமாக பூஜிக்கும் கன்யா பூஜை! 

 

நவராத்திரி ஸ்பெஷல்: பெண் குழந்தையை தெய்வமாக பூஜிக்கும் கன்யா பூஜை! 

நவராத்திரியில் அன்னை ஆதி பராசக்தியின் அருளை பெற  கன்யா பூஜை செய்யப்படுகிறது. 

நவராத்திரியில் அன்னை ஆதி பராசக்தியின் அருளை பெற  கன்யா பூஜை செய்யப்படுகிறது. 

இரண்டு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகளையே கன்னிகையாக அமர்த்தி கன்யா பூஜை செய்யப்படுகிறது. வேதம் கற்று தூய்மையான வாழ்க்கை வாழும் அந்தணர் குலத்தில் பிறந்த குழந்தைகளை பூஜை செய்தால் அனைத்து கார்ய சித்திகளையும் அடையலாம் என கூறப்படுகிறது. நீதியுடன் மக்களை வழிநடத்தும் அரச குலத்தினர் மற்றும் அரசாங்க உயர் பதவி வகிப்பவரின் குழந்தைகளை பூஜை செய்வதால் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றியை அடையலாம்.  நேர்மையான வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் குழந்தைகளை பூஜை செய்வதால் தொழிலில் மிகப் பெரிய லாபத்தையடைந்து செல்வந்தராக ஆகலாம். நம்பிக்கையுடன் செயலாற்றும் வேலைக்காரர்களின் குழந்தைகளை பூஜை செய்வதால் குடும்ப வம்ச விருத்தியை அடையலாம்.

கன்யா பூஜை
பூஜையை தொடங்குவதற்கு முன் வீட்டை தூய்மைப்படுத்தி, தீபம் ஏற்றி, 1 3 5 7 9 என்கிற ஒற்றைப்படையில் வரிசையில் பெண்களை கன்யா பூஜைக்கு அழைக்கப்பட வேண்டும். அவர்களை வரவேற்று, தம்பூல தட்டில் நிற்கவைத்து அந்த குழந்தைகளுக்கு பாத பூஜை செய்ய வேண்டும். அதன்பின் குங்கும சந்தனம் குடுத்து, அவர்களை கிழக்கு முகமாக உட்கார வைக்க வேண்டும். அவர்களுக்கு மாலையிட்டு, அம்மனாக பாவித்து அர்ச்சனையும், தீபாராத்தியும் செய்ய வேண்டும், அதன்பின் பாயசத்தை பிரசாதமாக வழங்கவேண்டும். இவையெல்லாம் முடித்த பிறகு வெற்றிலை பாக்கு புஷ்பம் பாவாடை சட்டை மற்றும் தட்சணையை ஒரு தட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இறுதியில் அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொல்வது சுகம்…!