நவராத்திரி விரதம் செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

 

நவராத்திரி விரதம் செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

நவராத்திரியின் நோன்பின்போது உணவுக் கட்டுப்பாடு மற்றும் குறைந்த அளவிலான சத்தான உணவுகளினால் பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

நவராத்திரியின் நோன்பின்போது உணவுக் கட்டுப்பாடு மற்றும் குறைந்த அளவிலான சத்தான உணவுகளினால் பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
நவராத்திரி என்பது துர்கா தேவியை வழிபடும் 9 நாள் திருவிழாவின் தொடக்கமாகும். திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு கடைப்பிடிக்கிறார்கள்.

Navaratri fasting

நவராத்தி நோன்பின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறையை தற்போது பார்க்கலாம்.
(1) தினமும் குளிக்க வேண்டும், எல்லா நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
(2) நவராத்திரி நோன்பின்போது பழங்கள், கொட்டைகள், பால் சாப்பிடலாம்.
(3) வீட்டில் தயாரிக்கப்படும் உணவும் தெய்வங்களுக்கு வழங்கப்படுகிறது.
(4) நவராத்தி முதல் நாளில் ஏற்றப்படும் விளக்கு கடைசி நாள் வரை எரிவதை உறுதி செய்யவேண்டும்.

Deepam

(5) துர்கா சாலிசாவைச் சேர்ந்த மந்திரங்களை படித்து துர்கா தேவிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
(6) நவராத்திரியின்போது துர்கா தேவி மக்களின் வீடுகளுக்கு வருவார் என்று நம்பப்படுவதால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
(7) நவராத்திரி நோன்பு நாட்களில் நீங்கள் மது அருந்தக் கூடாது, முட்டை, அசைவ உணவு, மருந்துகள், வெங்காயம் அல்லது பூண்டு ஆகியவற்றை உட்கொள்ளக்கூடாது. உடல் உறவும் செய்யக்கூடாது.
(8) நகங்களையோ, முடியையோ வெட்டக் கூடாது.

Navarathri

நவராத்திரியின் போது உண்ணாவிரதம் இருந்தால் பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:
(1) உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நிறைய தண்ணீர், சாஸ் மற்றும் தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
(2) உணவுப்பழக்கம் என்பது பட்டினி கிடப்பதாக அர்த்தமல்ல.
(3) வறுத்த உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
(4) வீட்டில் சமைத்த உணவைத் தேர்ந்தெடுத்து முடிந்தவரை எளிமையாக சாப்பிடுவது நல்லது