நவம்பர் 1, தமிழ்நாடு தினம் : அரசாணை வெளியீடு..

 

நவம்பர் 1, தமிழ்நாடு தினம் : அரசாணை வெளியீடு..

1956ல் பிரிந்து சென்ற மாநிலங்கள், தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாட்களைத் தனது மாநிலங்களின் தினமாகக் கொண்டாடி வருகின்றன.

63 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்திருந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. 1956ல் பிரிந்து சென்ற மாநிலங்கள், தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாட்களைத் தனது மாநிலங்களின் தினமாகக் கொண்டாடி வருகின்றன. அதனையடுத்து, நவம்பர் 1 ஆம் தேதி தமிழகம் உருவானதால் அந்த தினத்தைத் தமிழ் நாடு தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

Tamilnadu

கடந்த ஜூலை மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1 ஆம் தேதி தமிழக தினமாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். அதன் படி, இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடத் தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியதுள்ளது