நவகிரகங்களின் பாதிப்பைக் குறைக்கும் எளிய பரிகாரம்

 

நவகிரகங்களின் பாதிப்பைக் குறைக்கும் எளிய பரிகாரம்

நவகிரகங்களின் பெயர்களைக் கேட்டாலே அனைவரும் ஆரம்பத்தில் பயப்படத் தான் ஆரம்பிக்கிறார்கள்.

நவகிரகங்களின் பெயர்களைக் கேட்டாலே அனைவரும் ஆரம்பத்தில் பயப்படத் தான் ஆரம்பிக்கிறார்கள். நவக்கிரகங்கள் நமக்கு நன்மை தான் செய்கின்றன. முறையான வழிபாட்டினால் நவகிரகங்களை சாந்திப்படுத்த முடியும்.

navagraha

நவக்கிரகங்களில் அனைத்து கிரகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு வாகனம் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அந்த வாகனங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தரும் குறியீடுகளாகவே அமைந்திருக்கின்றன என்பதைத் தான் நாம் புரிந்துக் கொள்வதில்லை. 
அதாவது, சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை அல்லது புத்தி ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பாதிப்புகளை குறைக்கக் கூடியதாகவும் அமைவதற்கு அவற்றின் வாகனங்களை படங்கள் அல்லது சிறிய சிலைகளாக, உரிய இடத்தில் வைத்து பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. 
சூரிய தசா அல்லது புத்தி காலகட்டமானது ஒருவருக்கு நன்மைகளை தருவதற்கு, வீட்டின் மையப் பகுதியில் மயிலின் படம் அல்லது சிறிய உருவ சிலையை வைக்கலாம்.சந்திர தசா  அல்லது புத்தி நடக்கும் காலகட்டம் நன்மையை தருவதற்காக, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்கலாம். 

navagraha

செவ்வாய் தசா அல்லது புத்தியில் பாதிப்புகள் வராமல் தடுக்க, வீட்டின் தெற்கு பகுதியில் அன்னப்பறவையின் படம் அல்லது சிலை வைக்கலாம். புதன் கிரகத்தின் தசா அல்லது புத்தி நடக்கும் போது நன்மைகள் ஏற்பட, வீட்டின் வடகிழக்கு பகுதியில் குதிரையின் படம் அல்லது சிறிய அளவிலான சிலை வைக்கலாம். குருவின்  தசா அல்லது புத்தி காலங்கள் நன்மை தருவதற்கு, வீட்டின் வடக்கு பகுதியில் யானையின் படம் அல்லது உருவத்தை வைத்து பராமரித்து வரலாம்.
சுக்ரனின் தசா, புத்தி காலம் நன்மையாக அமைய, வீட்டின் கிழக்கு பக்கம் கருடன் படம் அல்லது சிலை வைக்கலாம். 

saturn

சனி கிரகத்தின் தசா, புத்தி காலம் நல்ல விதமாக அமைய, வீட்டின் மேற்கு பக்கத்தில் பறக்கும் நிலையில் உள்ள காகத்தின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம். 
ராகு தசா அல்லது புத்தி நடக்கும் காலம் நல்லவிதமாக இருக்க, வீட்டின் தென்மேற்கு பகுதியில் ஆட்டின் படம் அல்லது சிறிய சிலை வைக்கலாம். 

கேது தசாபுத்தி நடக்கும் சமயத்தில் நன்மைகள் நடக்க, வீட்டின் வடமேற்கு பகுதியில் சிங்கத்தின் படம் அல்லது சிலை வைக்கலாம்.இப்படி வைத்து அந்தந்த கிரகங்களுக்கு உரிய நாளில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். யோகம் நமது பக்கமும் திரும்பி பார்க்கும்.