நள்ளிரவு 1 மணிக்கு மேல் மெரினாவில் அனுமதி இல்லை!

 

நள்ளிரவு 1 மணிக்கு மேல் மெரினாவில் அனுமதி இல்லை!

புத்தாண்டு 2020 முன்னிட்டு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

புத்தாண்டு 2020 முன்னிட்டு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை வரை மெரினா கடற்கரை தீவிரமாக கண்காணிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடல் அலைகள் அருகே செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை

மேலும் கடற்கரை மணலில் வேகமாக செல்ல கூடிய பீச் பக்கி வாகனம் மூலம் கடற்கரை அருகே ரோந்து பணியில் இரண்டு வாகனங்கள் ஈடுபட உள்ளனர். வாகன ரேஸ்களை தடுக்க காமராஜர் சாலையின் அனைத்து நுழைவாயிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவலன் டேக் சிறுவர்களின் கைகளில் அணிவிக்கப்படுகிறது மெரினாவின் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 மணிக்கு மேல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.