நள்ளிரவுக்கு பிறகு நடந்த விசாரணை……நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…… இன்னும் சற்று நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு

 

நள்ளிரவுக்கு பிறகு நடந்த விசாரணை……நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…… இன்னும் சற்று நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு

குடியரசு தலைவர் தனது இரண்டாவது கருணை மனுவை நிராகரித்தை எதிர்த்து நிர்பயா குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை நள்ளிரவுக்கு பிறகு விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட உள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் தாகூர் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. குற்றவாளிகள் 4 பேரும் தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போடும் வகையில் ஒருவர் மாற்றி ஒருவர் பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இறுதியாக அண்மையில் மார்ச் 20ம் தேதியன்று (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம்  டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதனை ஒத்திபோடும் வகையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா அண்மையில் 2வது முறையாக குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் அதனை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா மனு தாக்கல் செய்தார். சில மணி நேரங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பவன் குப்தா மனுவை தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றம்

இதனையடுத்து நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் இன்னும் சற்று நேரத்தில் திஹார் சிறையில் தூக்கிலிடப்பட உள்ளனர். குற்றவாளிகள் பவன் குப்தா மற்றும் அக்சய் சிங் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள்  குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு முன்னதாக 5 முதல் 10 நிமிடங்கள் சந்தித்து பேச குற்றவாளிகளின் வக்கீல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால் சிறைச்சாலை கையேடு விதிகள் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு முன் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்காது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.