நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் – ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை

 

நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் – ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நள்ளிரவு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நள்ளிரவு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

40 தொகுதிகளுக்கான தமிழக மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன்படி திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட்  என அனைத்து கட்சிகளும்  தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.

congress candidates

ஆனால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தன. நேற்று முன் தினம் பாஜக தங்கள் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் காங்கிரஸ் நேற்று நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. 

தமிழகத்தில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதில் சிவகங்கையை தவிர்த்து மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை  அறிவித்துள்ளது. 

வேட்பாளர் பட்டியல் விவரம்:

திருவள்ளூர் தொகுதி- ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி- செல்லகுமார்

ஆரணி- விஷ்ணுபிரசாத்

கரூர்- ஜோதிமணி

திருச்சி- எஸ் திருநாவுக்கரசு

விருதுநகர்- மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி – எச்.வசந்தகுமார்

தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சிவகங்கை- இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதுவை – வைத்தியலிங்கம்