நள்ளிரவில் மாற்றப்பட்ட டெல்லி ஜட்ஜுக்கு கம்பீர ஃபேர்வெல் பார்ட்டி!

நள்ளிரவில் மாற்றப்பட்ட டெல்லி ஜட்ஜுக்கு கம்பீர ஃபேர்வெல் பார்ட்டி!

டெல்லி அரசின் பிளீடரான ராகுல் மெஹ்ராவையும்,டெல்லிப் போலீசையும் அடுக்கடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்த முரளிதர் மறுநாள் ( ஃபிப் 27 ) மதியம் 2.30 க்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலே கொடுத்தார்.அப்போதே நேரம் நள்ளிரவாகி விட்டது.வீட்டில் ஏ.சி பம்பாக்கியுடன் அமர்ந்து வடகிழக்கு டெல்லியில் இருந்து வரும் ஆம்புலென்ஸ்களை தடுக்கும் இந்துத்துவ கும்பலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு குறித்து விவாதித்துக்கொண்டு இருந்த போதுதான் அவருக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

கடந்த ஃபிப்ரவரி 26-ம் தேதி வடகிழக்கு டெல்லி பற்றி எரிந்துகொண்டு இருந்தபோது அதற்கு இணையாக டெல்லி ஹைக்கோர்ட்டையும் சூடாக்கியவர் நீதிபதி முரளீதரன்.

justice-muralidhar-78

டெல்லி அரசின் பிளீடரான ராகுல் மெஹ்ராவையும்,டெல்லிப் போலீசையும் அடுக்கடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்த முரளிதர் மறுநாள் ( ஃபிப் 27 ) மதியம் 2.30 க்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலே கொடுத்தார்.அப்போதே நேரம் நள்ளிரவாகி விட்டது.வீட்டில் ஏ.சி பம்பாக்கியுடன் அமர்ந்து வடகிழக்கு டெல்லியில் இருந்து வரும் ஆம்புலென்ஸ்களை தடுக்கும் இந்துத்துவ கும்பலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு குறித்து விவாதித்துக்கொண்டு இருந்த போதுதான் அவருக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

முரளீதரன் பஞ்சாப் மற்றும் ஹரியானவுக்கு  உடனடியாக மாற்றப்படுவதாக அந்த அழைப்பு அறிவித்தது.அது 15 நாட்கள் முன்பே சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் எடுத்த முடிவுதான் என்று சொல்லப்பட்டாலும் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

justice muralidhar 90

அதன் பிறகு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட அந்தக் கூட்டம் டெல்லியில் பல புருவங்களை உயரவைத்து இருக்கிறது. சமீப காலத்தில் எந்த நீதிபதிக்கும் இப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை என்று எல்லா தலைநகரப் பத்திரிகைகளும் எழுதின.

அதற்கு முன்னதாக டெல்லி பாரில் அவருக்கு அளிக்கப்பட்ட பார்ட்டியில் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஏ. பி ஷா,பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் ,வி.சி உபேந்திர பக்‌ஷி என்று பல பெருந்தலைகளைக் காண முடிந்தது.  முரளீதரனின் தாய்,மனைவி உஷா ராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.விழாவில் பேசும்போது முரளீதரன் சொன்ன ஒரு வரி செய்தி இதுதான்,” நீதி வெல்ல வேண்டும் என்று நினைத்தால்,உண்மையின் பக்கம் நில்லுங்கள்”!.எல்லோராலும் முடிகிற காரியமா?.