நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்: ஓடி வந்து உதவிய பெண் காவல் ஆய்வாளர்!

 

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்: ஓடி வந்து உதவிய பெண் காவல் ஆய்வாளர்!

சென்னை கொன்னூர் தலைமைச் செயலக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நேற்று 2.30 மணி அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சென்னை கொன்னூர் தலைமைச் செயலக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நேற்று 2.30 மணி அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கே.எச் சாலை அருகே சென்று கொண்டு இருந்த சமயத்தில் ஒரு வயதான பெண் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார்.

அப்போது காவல் ஆய்வாளர் அருகில் சென்று விசாரித்த போது, அவரின் பெண் ஷீலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, பனிக்குடம் உடைந்து விட்டதாகக் கூறியுள்ளார். நடுராத்திரி என்பதால் யாரும் உதவ வரவில்லை என்றும் தெருவுக்குள் 108 ஆம்புலன்ஸ் வர இயலமுடிவில்லை  என்று அழுதுகொண்டே கூறியுள்ளார்.

உடனே அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கர்ப்பிணிப் பெண்ணான ஷீலாவை காவல் துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.  

rajeshwari

கீழ்ப்பாக்கம் மருத்துவக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இன்று அதிகாலை 3.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. உதவி செய்த அந்த போலீசாருக்கு அவரது குடும்பத்தின் நன்றி தெரிவித்துள்ளனர்.