நள்ளிரவில் நடந்த அகோரிகள் பூஜை!  அதிர்ச்சி வீடியோ!

 

நள்ளிரவில் நடந்த அகோரிகள் பூஜை!  அதிர்ச்சி வீடியோ!

சாந்த சொரூபமாய் வழிபடுகிற கடவுள்களில் ஆரம்பித்து உக்கிரமாய் வணங்கி ஆக்ரோஷமாய் வழிபடும் காளி வரையில் இந்துக்கள் விதவிதமாய் கடவுளை வழிபட்டு தங்களது பக்தியைத் தெரிவித்து வருகிறார். இதில் அகோரிகளின் வழிபாடெல்லாம் வேறு ரகம். இந்நிலையில், திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் இருக்கும் ஜெய் அகோர காளி கோயில் பிரசித்தி பெற்றது.

சாந்த சொரூபமாய் வழிபடுகிற கடவுள்களில் ஆரம்பித்து உக்கிரமாய் வணங்கி ஆக்ரோஷமாய் வழிபடும் காளி வரையில் இந்துக்கள் விதவிதமாய் கடவுளை வழிபட்டு தங்களது பக்தியைத் தெரிவித்து வருகிறார். இதில் அகோரிகளின் வழிபாடெல்லாம் வேறு ரகம். இந்நிலையில், திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் இருக்கும் ஜெய் அகோர காளி கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும், அமாவாசை, பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களிலும் நடைப்பெறும் சிறப்பு பூஜைகளில் பங்கெடுப்பதற்காகவே பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள்.

akori poojai

அதே போன்று ஒவ்வொரு வருஷமும் நவராத்திரி விழா நாட்களில், கங்கா, பிரம்மபுத்திரா, நர்மதா, கிருஷ்ணா, காவிரி, யமுனா, சரஸ்வதி, மகாநநதி, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து இந்த ஆலயத்தில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட நவராத்திரி விழாவை முன்னிட்டு, தொடக்க நாளன்று ஜெய் அகோரகாளி, ஜெய் அஷ்டகால பைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நவராத்திரி பூஜைகள் நடந்ததையொட்டி, நள்ளிரவில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த அகோரிகள் தங்கள் உடம்பில் சாம்பல்களைப் பூசிக் கொண்டு யாக பூஜைகளை நடத்தினார்கள். அப்போது டமருகம் மேளம் அடித்தும், சங்குகள் முழங்கியும், மந்திரங்கள் ஓதினர். இது பார்ப்பவர்களுக்கு திகிலைக் கிளப்பியது.